5 ரஷ்ய வங்கிகள் மீது இங்கிலாந்து பொருளாதாரத் தடை விதிப்பு

இங்கிலாந்தில் வைக்கப்பட்டிருக்கும் 3 பேரின் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும். சம்பந்தப்பட்ட நபர்கள் இங்கு பயணிக்கவும் தடை விதிக்கப்படும். இங்கிலாந்தில் உள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களுடன்  அவர்கள் எந்த விதமான தொடர்புக் கொள்வதற்கும் தடை செய்யப்படுகிறது. மேலும், ஐந்து ரஷ்ய வங்கிகளான ரோசியா, ஐஎஸ் வங்கி, ஜெனரல் வங்கி, ப்ராம்ஸ்வியாஸ் பேங்க் மற்றும் பிளாக் சீ ஆகிய வங்கிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. இறையாண்மையுள்ள உக்ரைனில் ரஷ்யா படைகளை நிலைநிறுத்துவது அந்நாட்டின் மீது மீண்டும் படையெடுப்பதற்கு சமம் என்பதில் சபைக்கு எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.

Leave a Reply

Your email address will not be published.