சென்னை அயனாவரம் மேட்டுதெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 24). எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் பெரியமேடு ராஜ முத்தையா சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியின் மொட்டை மாடியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணகுமார் எதிர்பாராத விதமாக கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்
