உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது!
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. அங்கு கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 8 கோடியை கடந்து சென்று கொண்டிருக்கிறது. அதே போல் அங்கு 9½ லட்சத்துக்கும் அதிகமான உயிர்களை கொரோனா பறித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 54,809 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும், ஒரே நாளில் 1,443 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பால் இதுவரை மொத்தம் 9.5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் இதுவரை 9,63,185 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8.02 கோடியை கடந்தது.
உலகின் பிற நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி, ஜெர்மனியில் 1.58 லட்சம் பேர், ரஷியாவில் 1.35 லட்சம் பேர், பிரேசிலில் 1 லட்சத்து ஆயிரத்து 285 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42.79 கோடியாக உயர்ந்தது. உலக அளவில் 59.23 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 35.57 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின் குணமடைந்துள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.