லாலுபிரசாத் உடல்நிலை மோசம் அடைந்தது – மருத்துவமனை தகவல்..

லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மோசமாக உள்ளதாக மருத்துவமனை டாக்டர்கள் குழுவின் தலைவர் வித்யாபதி தெரிவித்துள்ளார். 5-வது கால்நடை தீவன ஊழல் வழக்கில் கடந்த 15-ந் தேதி குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட லாலுபிரசாத் யாதவ், ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நல குறைவு ஏற்பட்டதால், ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிலைய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று 5-வது வழக்கில், லாலுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.

Leave a Reply

Your email address will not be published.