புயலின்போது வானத்திலிருந்து பிரித்தானியர் மீது விழுந்த இரத்தம் உறிஞ்சும் உயிரினம்..

பிரித்தானியாவில் Eunice புயலின்போது, Byron Potter (38) என்பவர் தன் தோட்டத்தில் நின்றுகொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரது தோள் மீது 6 அங்குல நீளமுடைய உயிரினம் ஒன்று விழுந்திருக்கிறது. பறவைகள் ஏதாவது அதைத் தூக்கி வரும்போது அது தன் மீது விழுந்திருக்கலாம் என்று எண்ணி மேலே பார்த்தால், அங்கே பறவைகள் எதையும் காணோம். சரி, அது என்ன பூச்சி என்று பார்க்க, அதை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் போட்டிருக்கிறார். தண்ணீருக்குள் போட்டதும் அந்த பூச்சி நகரத் துவங்கியுள்ளது. அப்போதுதான், அது ஒரு இரத்தம் உறிஞ்சும் அட்டைப் பூச்சி என்பதை அவர் தெரிந்துகொண்டிருக்கிறார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.

Leave a Reply

Your email address will not be published.