ஹிஜாப் சர்ச்சைக்கும் பஜ்ரங் தள் நிர்வாகி கொலைக்கும் தொடர்பு இல்லை: கர்நாடக உள்துறை மந்திரி
கர்நாடக மாநிலம், ஷிவமொகாவில் நேற்று இரவு 9 மணியளவில் பஜ்ரங் தள் ஆர்வலர் ஹர்ஷா(26) மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஷிவமொகா நகரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பஜ்ரங் தள் நிர்வாகி கொலைக்கும் ஹிஜாப் சர்ச்சைக்கும் எந்த வித தொடர்பும் இருப்பதாக தற்போது வரை நடைபெற்று வரும் விசாரணையில் தெரியவில்லை என மந்திரி தெரிவித்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.