பிரித்தானியாவில் கொரோனாவுடன் வாழும் திட்டம் முன்னெடுப்பு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
பிரித்தானியாவில் தனிமைப்படுத்தல் உட்பட அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாட்டு சட்டங்களையும் அகற்றுவது குறித்த தனது திட்டத்தை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வகுத்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பரவல் முடிவடையாத நிலையில், கொரோனாவுடம் வாழ்வோம் என்ற புதிய திட்டத்தை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வகுத்து வருகிறார். இது குறித்து போரிஸ் ஜான்சன் தெரிவிக்கையில், இங்கிலாந்தில் தடுப்பூசி முன்னெடுப்பு வெற்றியடைந்து இருக்கும் நிலையிலும், கொரோனாவால் பதிவாகும் இறப்புகளின் எண்ணிக்கை இங்கிலாந்தின் குளிர்கால இறப்புகளின் எண்ணிக்கையோடு ஒத்துப்போக தொடங்கியுள்ளதால் இந்த திட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.