காணாமல் போன ஹாலிவுட் நடிகை பிணமாக மீட்பு

பிரபல ஹாலிவுட் நடிகை லின்ட்சே பேர்ல்மென். இவர், அமெரிக்காவில் அதிக எபிசோடுகள் ஒளிபரப்பாகி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று ’ஜெனரல் ஹாஸ்பிடல்’ என்ற தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ’சிகாகோ ஜஸ்டிஸ்’ உட்பட மேலும் சில தொடர்களிலும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து இருக்கிறார். 43 வயதான லின்ட்சே பேர்ல்மென், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென்று அவர் காணாமல் போனார். குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடினர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஹாலிவுட் பகுதியில் லின்ட்சே பேர்ல்மென் மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவர் எப்படி இறந்தார் என்ற விவரம் தெரியவில்லை. பிணத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். லின்ட்சே பேர்ல்மென் மறைவால் நொறுங்கி போய் இருக்கிறேன். என்று அவரது கணவர் வான்ஸ் ஸ்மித் சமூக வலைத்தளத்தில் வருத்ததை தெரிவித்து உள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.

Leave a Reply

Your email address will not be published.