களைகட்டும் உருளைக்கிழங்கு சிப்ஸ் வாசனை திரவியம்..!

அமெரிக்காவில் உள்ள நிறுவனம் ஒன்று உருளைக்கிழங்கு சிப்ஸ் (French Fries) நறுமணம் கொண்ட வாசனை திரவியம் (Perfume) ஒன்றை உருவாக்கி உள்ளது.அமெரிக்காவின் இதாகோ மாகாணத்தில் உள்ள ‘தி இதாகோ பொட்டேட்டோ கமிஷன்’ என்ற நிறுவனம் இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் நறுமணம் கொண்ட வாசனை திரவியத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாசனை திரவியம் குறித்து அந்த நிறுவனம், அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் காய்ச்சி வடிகட்டிய இதாகோ உருளைக்கிழங்கு ஆகியவற்றின் கலவையிலிருந்து இந்த வாசனை திரவியம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.இந்த வாசனை திரவியத்திற்கு அந்த நிறுவனம் பிரைட்ஸ் (Frites) என்று பெயரிட்டுள்ளது. அந்த நிறுவனம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘இதாகோவின் பிரைட்சை அறிமுகப்படுத்துகிறோம். இது உருளைக்கிழங்கு சிப்ஸ்-ன் தவிர்க்கமுடியாத வாசனையால் தயாரிக்கப்பட்ட ஒரு அற்புதமான நறுமணமாகும்.அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் காய்ச்சி வடிகட்டிய இதாகோ உருளைக்கிழங்கு ஆகியவற்றின் கலவையிலிருந்து இந்த வாசனை திரவியம் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்றே உங்களுடையதை பெறுங்கள்! குறைந்த அளவிலேயே உள்ளது’ என்று விளம்பரம் செய்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.

Leave a Reply

Your email address will not be published.