ஏழுமலையானை தரிசிக்க 5 நாட்கள் காத்திருக்கும் பக்தர்கள்

சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று, 48 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்று விவரங்களை உடன் கொண்டு வர வேண்டும். சமீப காலமாக இலவச தரிசனத்தில் சென்ற சாதாரண பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. தற்போது நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது. பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் அவர்கள் சாமி தரிசனம் செய்யவும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.

Leave a Reply

Your email address will not be published.