உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க இந்த ஜூஸை குடிங்க…

இப்போது நாம் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மற்றொரு வழியைப் பார்க்கப் போகிறோம். அது தான் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ட பின்னர் குடிக்க வேண்டிய ஜூஸ்கள். இந்த ஜூஸ்களைக் குடித்தால் ஆரோக்கியமற்ற கொழுப்புக்களைக் குறைக்கலாம். மேலும் இந்த ஜூஸ்கள் உடலுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடியவை. இப்போது கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் ஜூஸ்கள் எவை என்பதைக் காண்போம்.

மாதுளை ஜூஸ்:

மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில் மாதுளை ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கெட்ட கொலஸ்டராலைக் குறைக்க உதவும்.

ஆரஞ்சு ஜூஸ்:

ஆரஞ்சு ஜூஸ் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் கொழுப்புக்கள் மற்றும் சோடியம் இல்லை. இதில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

தக்காளி ஜூஸ்:

தக்காளியில் லைகோபைன் அதிகமாக உள்ளது. இது லிபிட்டுகளின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.

ஓட்ஸ் பானம்:

ஓட்ஸில் பீட்டா குளுக்கன்கள் உள்ளன. இது குடலில் ஒரு ஜெல் போன்ற பொருளை உருவாக்குகிறது மற்றும் பித்ததுடன் தொடர் கொண்டு கொழுப்புக்களை உடல் உறிஞ்சுவதைக் குறைக்கிறது. தினமும் 3 கிராம் பீட்டா குளுக்கன்களை உட்கொள்வது 7% கெட்ட கொழுப்புக்களைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பூசணி ஜூஸ்:

பூசணி ஜூஸில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான பாலிஃபீனோலிக் கலவைகள் மற்றும் பீட்டா கரோட்டீன் ஆகியவை உள்ளன. இவை இரண்டும கொலஸ்ட்ரால் தேக்கத்தை மற்றும் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும்.

குறிப்பு:

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஜூஸ்களில் எவற்றை வேண்டுமானாலும், ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் தினமும் தவறாமல் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும். அதோடு, இந்த ஜூஸை எண்ணெய் உணவுகளை உண்ட பின்னர் குடிப்பது இன்னும் நல்லது. இதனால் ஆரோக்கியமற்ற கொழுப்புக்கள் உடலில் தேங்குவதைத் தடுக்கலாம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.

Leave a Reply

Your email address will not be published.