பள்ளிக்கு நிலம் தானம்; முஸ்லிம் குடும்பத்தினர் வழங்கல்!!!
பெங்களூரு : மைசூரு எச்.டி.கோட்டே மார்ச்சள்ளி கிராமத்தில் வசித்த முகமது ரகிம், பள்ளிக்காக நிலம் வழங்க விரும்பினார். அவரது கனவு நிறைவேறுவதற்குள், அவர் காலமானார். தற்போது அவரது குடும்பத்தினர், 2.50 ஏக்கர் நிலத்தை, அரசு பள்ளிக்காக தானம் செய்துள்ளனர். கிராமப்புற சிறார்களின் கல்விக்காக, நிலம் வழங்கினோம். எந்த குழந்தையும். கல்வி பெறுவதிலிருந்து வஞ்சிக்கப்படக்கூடாது. படித்தவர்கள் சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்பது, எங்கள் தந்தையின் கனவு. அதை நாங்கள் நிறைவேற்றினோம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.