ஓட்டுச்சாவடிகளுக்கு தடையில்லா மின்சாரம்..
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நடப்பதால் அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும் தடையில்லாமல் மின்வினியோகம் செய்ய கூடுதல் ஊழியர்களை தமிழக மின் வாரியம் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.தமிழகத்தில் மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் கிடைத்தாலும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின் சாதன பழுதால் மின் தடை ஏற்படுகிறது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது. இதனால் அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும் தடையில்லாமல் மின் வினியோகம் செய்வதை உறுதி செய்யுமாறு பிரிவு அலுவலக பொறியாளர்களை மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.