இலவச வீடுகள்… பொதுமக்கள் மகிழ்ச்சி!!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மத்திய அரசு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த 3,859 பேருக்கு இலவச வீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது .ராணிப்பேட்டை மாவட்டத்தில் 288 கிராம ஊராட்சிகள் உள்ளன அவற்றில் 2021 – 2022 நிதியாண்டில் தகுதிபெற்ற 100 ஊராட்சிகளில் தலா 52 வீடுகள் கட்ட மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பயனாளிகளுக்கு 104 மூட்டை சிமெண்ட் மிகவும் குறைந்த விலையில் வழங்கவும் அரசு பரிந்துரை செய்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.