போராட்டங்கள் கட்டாயம் முடிவுக்கு வரவேண்டும் – கனடா பிரதமர் வலியுறுத்தல்
லாரி டிரைவர்கள் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக நாடு முழுவதும் அவசரநிலை சட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். சட்டவிரோத மற்றும் ஆபத்தான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டிய நேரம் இது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். கனடா நாட்டு பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, போராட்டங்கள் கட்டாயம் முடிவுக்கு வரவேண்டும். சட்டவிரோத மற்றும் ஆபத்தான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டிய நேரம் இது. நமது பொருளாதாரத்திற்கும் வர்த்தக பங்காளிகளுடனான நமது உறவுக்கும், பொது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளனர் என குறிப்பிட்டார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.