உக்ரைன் பகுதியில் உள்ள மழலையர் பள்ளி மீது குண்டு வீச்சு..
உக்ரைனில் குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையேயான மோதல் சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. உக்ரைனின் எல்லையில் ஒரு லட்சத்திற்கும் மேலான இராணுவ வீரர்களை ரஷ்யா குவித்துள்ள நிலையில், உக்ரைன், ரஷ்யா எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. சோவியத் ஒன்றியத்தின் அங்கமாக இருந்த உக்ரைன், 1991-ஆம் ஆண்டு தனி நாடாக சுதந்திரம் பெற்றது. தற்போது தனி நாடாக இருந்தாலும் வர்த்தகம், பொருளாதாரம் போன்றவற்றுக்கு ரஷ்யாவையே உக்ரைன் அதிகம் சார்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் வர்த்தக உறவை வளர்த்துக் கொள்ளப் பேச்சு நடத்தினாலும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாமல் ரஷ்யாவின் மிரட்டலுக்கு அஞ்சிப் பின்வாங்கியது உக்ரைன். ஆனால் ரஷ்யாவின் மேலாதிக்கத்தை நிராகரித்தும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தும் உக்ரைனிய மக்கள் 2005 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இரண்டு புரட்சிகளை நடத்தினர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.