வாக்காளர்களுக்கு வீடு, வீடாக பணப்பட்டுவாடா செய்த கல்லூரி மாணவர் கைது!!
நெற்குன்றத்தில் வீடு, வீடாக பணப்பட்டுவாடா செய்த கல்லூரி மாணவரை கைது செய்த போலீசார் ரூ. 41 ஆயிரத்து 600 ரொக்கம் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி மண்டலம் 11-க்கு உட்பட்ட 148-வது வார்டு நெற்குன்றம் தேசம்மாள் நகர் விரிவு பகுதியில் நேற்று இரவு வீடு வீடாக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. உதவி பொறியாளர் கவியரசு தலைமையில் விரைந்து வந்த பறக்கும் படையினர் பணம் பட்டுவாடா செய்த 2 வாலிபர்களை மடக்கி பிடித்தனர். அப்போது திடீரென ஒருவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.