சிறுவர்களுக்கு இலவசமாக பாடம் கற்பிக்கும் பெண்
உயர்நிலைப் பள்ளி பட்டதாரியான நஜந்த், காபூல் பூங்கா ஒன்றில் சிறுவர்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று மணி நேரம் பாடம் நடத்துவதாக கூறியுள்ளார்.
சிறுவர்களுக்கு முதலில் தாரி (ஆப்கானிஸ்தானில் பேசப்படும் பாரசீக மொழி) கற்பிக்க ஆரம்பித்தேன். அவர்களுக்கு எப்படி படிக்க வேண்டும் என்றும் பின்னர் படிப்படியாக கணிதத்தையும், குரானையும் கற்பிக்க ஆரம்பித்தேன். மாணவர்கள் இப்போது ஆங்கிலம் கற்க ஆர்வமாக உள்ளனர். இங்கு 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த குழந்தைகள் முதலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நான் அவர்களை வேலை செய்ய ஊக்குவித்தேன். பிச்சை எடுப்பதை நிறுத்தி அவர்களைப் படிக்கத் தூண்டினேன். ஊக்குவிப்பது தான் இந்த நேரத்தில் செய்ய வேண்டிய சிறந்த விஷயங்களில் ஒன்றாகும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.