உலகின் மர்மமான ஏரி! இந்த ஏரியின் நீர் உயிரைக் குடிக்கும்!!
உலகின் மர்மமான ஏரியான ஃபுண்டுஜி, இந்த ஏரியின் தண்ணீரைக் குடித்தால், எமன் உயிரைக் குடித்து விடுவாராம்.
1946 ஆம் ஆண்டு ஆண்டி லெவின் என்ற நபர் ஏரியின் மர்மத்தை அவிழ்க்க முயன்றதாக கூறப்படுகிறது. தண்ணீரின் உண்மையை அறிய அவர் இங்கு வந்தார். ஏரியில் இருந்து கொஞ்சம் தண்ணீரையும், அந்தப் பகுதியில் இருந்த சில தாவரங்களையும் எடுத்துக் கொண்டு சென்றார்.
சேகரித்தப் பொருட்களுடன் சென்றுக் கொண்டிருந்த அவர் வழி தவறிவிட்டார். தன்னிடம் இருந்த தண்ணீரையும் செடிகளையும் வீசி எறியும் வரை அவரால் வழி கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது அவர் உயிர் பிழைத்தாலும், சில நாட்களிலேயே அவர் உயிரிழந்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.