இரு ஆண்டுகள் மாயமான சிறுமி; வீட்டு படிக்கட்டின் கீழ் கண்டுபிடிப்பு!
அமெரிக்காவின் நியூயார்க்கில், இரண்டு ஆண்டுகளாக காணாமல் போன சிறுமி, அவரது வீட்டின் படிக்கட்டுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சிறுமி காணாமல் போன நிலையில், இரண்டு வருடத்திற்கு பிறகு, சமீபத்தில், நியூயார்க்கின் ஹட்சனில் உள்ள அவரது வீட்டின் படிக்கட்டுகளின் கீழ் கட்டப்பட்ட ஒரு சிறப்பு அறையில், போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டார். குழந்தையின் உடல்நிலை சீராகவே உள்ளது என்றும் பாதிப்பு ஏதும் இல்லை எனவும் போலீஸார் தெரிவிக்கின்றனர். சிறுமியை அவளது பெற்றோரே கடத்திச் சென்றதாக நம்பப்படுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.