ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்!!

ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவின் ஷா அலாம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் இந்தியா நேற்று நடைபெற்ற தனது தொடக்க ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி மலேஷிய அணியை எதிர்கொண்டது.இந்த ஆட்டத்தில் 2-3 என்ற கணக்கில் இந்தியா மலேசியாவிடம் வீழ்ந்தது. எனினும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அஷ்மிதா சாலிஹா, தாரா ஷா வெற்றி பெற்றனர். மற்ற 3 ஆட்டங்களில் இந்திய வீராங்கனைகள் தோல்வி அடைந்தனர்.முன்னதாக தென் கொரிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.இன்று நடைபெறும் ஆட்டத்தில் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற லக்‌ஷயா சென் தலைமையிலான இந்திய ஆடவர் அணி ஹாங்காங் அணியை  எதிர்கொள்கிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.

Leave a Reply

Your email address will not be published.