45வது சென்னை புத்தகக் காட்சி :
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் பள்ளிகள், கல்லூரிகள் திறந்திருக்கும் நிலையில், புத்தககாட்சியை மீண்டும் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையடுத்து பிப்ரவரி 16ஆம் தேதி முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை புத்தக காட்சியை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் இன்று புத்தக கண்காட்சி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. இந்த 45ஆவது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தொடங்கி வைக்கிறார். புத்தக கண்காட்சி இன்று முதல், தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. 790 அரங்குகளில் சுமார் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிபடுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.