ரஷ்யா குறிவைத்தால் தக்க பதிலடி கொடுப்போம்! – ஜோ பைடன்
உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டு இருந்த ராணுவ வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்பியதாக ரஷ்ய ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டன.இந்நிலையில் உக்ரைனில் உள்ள அமெரிக்கர்களை ரஷ்யா குறிவைத்தால், அதற்காக தக்க பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் அவர் கூறுகையில், “உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு தீர்க்கமான பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம், இது இன்னும் சாத்தியமாகும். உக்ரைனில் உள்ள அமெரிக்கர்களை ரஷ்யா குறிவைத்தால், நாங்கள் ரஷ்யாவுடன் நேரடி மோதலை நாடவில்லை என்றாலும், நாங்கள் கடுமையாக பதிலடி கொடுப்போம்” என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.