பீகாரில் நிதிஷ் அரசுக்கு எதிராக போராட்டம்….
பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கிறது.இந்த அரசு எல்லாவற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாகக்கூறி, இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் லோக்ஜனசக்தி கட்சித்தலைவர் சிராக் பஸ்வான், தனது ஆதரவாளர்களுடன் நேற்று போராட்டம் நடத்தினார்.தொடர்ந்து பேரணியாக சென்று மாநில கவர்னர் பாகுசவுகானை சந்தித்து நிதிஷ் குமார் அரசுக்கு எதிரான மனு அளிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தனர்.இந்த போராட்டத்தின்போது சிராக் பஸ்வான் பேசும்போது, “நிதிஷ்குமார் அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதிலும், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதும், கல்வி, சுகாதாரம் என அனைத்து துறையிலும் தோல்வி அடைந்துள்ளது. எனவே அதை இடைநீக்கம் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.“பீகாரை காப்பாற்றுங்கள்” என்ற கோஷங்கள் தாங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.