பாக்., ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள்

நியூயார்க்:“மும்பை மற்றும் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் தொடர்புடைய பயங்கரவாதிகள், ஒரு நாட்டின் ஆதரவுடன் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்,” என, ஐ.நா.,வுக்கான இந்திய ஆலோசகர் ராஜேஷ் பரிஹார் பாகிஸ்தானை குறிப்பிட்டு சாடினார்.

ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையில், பயங்கரவாத தடுப்புக்குழு கூட்டம், நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பேசிய ஐ.நா.,வுக்கான இந்திய ஆலோசகர் ராஜேஷ் பரிஹார், பாகிஸ்தானை மறைமுகமாக சாடினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த 2008ல், மும்பை பயங்கரவாத தாக்குதல்; 2016ல், பதான் கோட் பயங்கரவாத தாக்குதல்; 2019ல், புல்வாமா பயங்கரவாத தாக்குதல் என, பல பயங்கரவாத சம்பவங்களை உலகம் பார்த்துள்ளது.இவற்றில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.

Leave a Reply

Your email address will not be published.