சீட்டை கிழித்த ஓபிஎஸ், இபிஎஸ்: இப்படி ஒரு எச்சரிக்கை!!!
அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதாக அக்கட்சியைச் சேர்ந்த 77 பேரை கட்சியிலிருந்து நீக்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும். கட்சிக்கு எதிராக செயல்பட்ட கோவை புறநகர் தெற்கு, கோவை புறநகர் வடக்கு, கோவை மாநகர், திருச்சி மாநகர், மதுரை மாநகர், மயிலாடுதுறை, சிவகங்கை, சென்னை புறநகர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் 77 பேர், அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.