மறைமலை நகர் நகராட்சியில் 12வது வார்டில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தமிழரசு, நுாதன முறையில், திருமண பத்திரிகை வடிவில் தன் வாக்குறுதிகளை அச்சடித்து, வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று, வழங்கி வருகிறார். தாம்பூலத் தட்டில் பூ, பழம், இனிப்பு போன்றவற்றை வைத்து, ‘திருமணத்திற்கு அவசியம் வரவேண்டும்’ என அச்சிடப்பட்ட அழைப்பதை போல், வீடு வீடாக சென்று, ‘அவசியம் வந்து ஓட்டுப்போடுங்கள்… அதுவும் இரட்டை இலை சின்னத்துக்கு போடுங்க’ என, ஓட்டு சேகரிக்கிறார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.
