வாகனம், தொலைபேசி இல்லாத 1,000 போலீஸ் ஸ்டேஷன்கள்!!
புதுடில்லி : ‘நாடு முழுதும், 257 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு எந்த வாகனமும் இல்லை; 638 ஸ்டேஷன்களில் தொலைபேசி வசதி இல்லை’ என, பார்லியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.காங்.,கைச் சேர்ந்த ஆனந்த் சர்மா தலைமையிலான, உள்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு, தன் அறிக்கையை பார்லியில் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுதும் உள்ள, 16,833 போலீஸ் ஸ்டேஷன்கள் குறித்த புள்ளி விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.