நினைவகம் கட்டுவதில் விருப்பமில்லை.. – லதா மங்கேஷ்கர் சகோதரர் வேண்டுகோள்

புகழ்பெற்ற இந்திய சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த 6-ம் தேதி மும்பையில் மரணம் அடைந்தார். அவரது 75 ஆண்டு கால இசைப் பயணத்தை போற்றும்விதமாக மும்பையில் உள்ள கலினாவில் 2.5 ஏக்கர் நிலத்தில் இசைப் பள்ளி அமைக்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்தது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, பாஜக எம்எல்ஏ ராம் கதம்,  மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்ட சிவாஜி பூங்காவில் நினைவகம் அமைக்க வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதினார். ஆனால் இதற்கு எதிராக சர்ச்சை கருத்துகள் எழுந்து வருகிறது.

இதுகுறித்து லதா மங்கேஷ்கரின் சகோதரர் ஹிருதய்நாத் கூறியதாவது:- மும்பை சிவாஜி பூங்காவில் புகழ்பெற்ற பாடகிக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனை அரசியலாக்குவதை நிறுத்துங்கள். மாநில அரசு அறிவித்த இசைப் பள்ளி திறக்கும் முடிவே லதா மங்கேஷ்கருக்கு அளிக்கும் சிறந்த அர்ப்பணிப்பாக இருக்கும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.

Leave a Reply

Your email address will not be published.