திம்பம்: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…..
திம்பம் மலைப் பாதையில் இரவு போக்குவரத்துக்கு விதித்த தடையை நீக்கக் கோரி, பண்ணாரி சோதனைச்சாவடியில் நேற்று ஆயிரக்கணக்கானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திம்பம் மலைப் பாதையில் விபத்துகளை தடுக்கவும், வன உயிரினங்களை காக்கவும், நீதிமன்ற உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி, பண்ணாரி சோதனை சாவடி முதல் ஆசனுார் சோதனை சாவடி வரை, கோவை – பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முதல் நீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு வருகிறது* அனைத்து வர்த்தக ரீதியிலான கனரக வாகனங்கள், மாலை, 6:00 முதல், காலை 6:00 மணி வரை இச்சாலையில் செல்ல தடை விதிக்கப்படுகிறது* வர்த்தக ரீதியிலான இலகுரக வாகனங்கள், பயணியரை ஏற்றி செல்லும் நான்கு சக்கர வாகனங்கள் இரவு, 9:00 முதல் காலை, 6:00 மணி வரை செல்ல தடை செய்யப்படுகிறது* தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அணுகு சாலைகள், மற்றும் நுழைவு சாலைகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.அமலுக்கு வந்தது தடை சத்தியமங்கலம் புலிகள் காப்பக தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் நிஹார் ரஞ்சன் வெளியிட்ட அறிக்கை: திம்பம் மலைப் பாதையில் விபத்துகளை தடுக்கவும், வன உயிரினங்களை காக்கவும், நீதிமன்ற உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி, பண்ணாரி சோதனை சாவடி முதல் ஆசனுார் சோதனை சாவடி வரை, கோவை – பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முதல் நீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு வருகிறது அனைத்து வர்த்தக ரீதியிலான கனரக வாகனங்கள், மாலை, 6:00 முதல், காலை 6:00 மணி வரை இச்சாலையில் செல்ல தடை விதிக்கப்படுகிறது வர்த்தக ரீதியிலான இலகுரக வாகனங்கள், பயணியரை ஏற்றி செல்லும் நான்கு சக்கர வாகனங்கள் இரவு, 9:00 முதல் காலை, 6:00 மணி வரை செல்ல தடை செய்யப்படுகிறது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அணுகு சாலைகள், மற்றும் நுழைவு சாலைகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.