கோவாவில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் – ராகுல் காந்தி

கோவாவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
அந்தக் கால வரலாறு அவருக்குப் புரியவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கோவாவில் சுரங்கத்தை நிலையான மற்றும் சட்டப்பூர்வமான வழியில் மீட்டெடுக்க திட்டமிட்டுள்ளோம். மக்களை திசைதிருப்பும் உரையாடலில் நான் ஈடுபடமாட்டேன். அவர்களுக்கு எது முக்கியம் என்பதில் எனது கவனம் உள்ளது. இம்முறை அறுதிப் பெரும்பான்மை பெற்று, கோவாவில் ஆட்சி அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.

Leave a Reply

Your email address will not be published.