குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்
இங்கிலாந்தின் ஐரிஷ் கடற்கரை நகரமான பிளாப்பூல் அருகே உள்ள லங்காஷயர் பகுதியில் 99 வயதான மூதாட்டி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. மன அழத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த அந்த மூதாட்டியின் நடத்தையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை கண்ட அவரது குடும்பத்தினர் அவரது அறையில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவை கண்காணித்தனர். அதில் 48 வயதான வீட்டின் பராமரிப்பாளர் பிலிப் கேரி என்பவர் அந்த மூதாட்டியின் அறைக்குள் நுழைவதையும், பின்னர் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த காட்சியை கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்ததை அடுத்து கைது செய்யப்பட்டார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.