மக்களுடன் இணைந்துள்ள ‘காமிக்ஸ்’
பெல்பாஸ்ட்:சுகாதாரம் முதல் சுற்றுச்சூழல் வரை, ‘காமிக்ஸ்’ மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கிறது.காமிக்ஸ் எனப்படும், சித்திரங்கள் வாயிலாக கதைகளை காட்சிப்படுத்தும் முறை, உலகம் முழுதும் மிகவும் பிரபலம்.
பாரம்பரியமிக்க இந்த காமிக்ஸ், 1920ம் ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. சுற்றுச்சுழல் சார்ந்த விஷயங்களை மாணவ – மாணவியரிடம் கொண்டு செல்லவும் காமிக்ஸ் பயன்படுகிறது. இது, ‘இகோ காமிக்ஸ்’ என அழைக்கப்படுகிறது.
சுற்றுச்சூழலை பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கழிவுகளை அப்புறப் படுத்தும் வழிகள் ஆகியவை குறித்து மக்களுக்கு விளக்க, காமிக்ஸ் உபயோகிக்கப்படுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.