ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்….
சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டரைவாக்கம் பகுதியில் ஒரு தனியார் குடோனில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறை – நுண்ணரிவு புலனாய்வு துறைக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனசரக அலுவலகர் மகேந்திரன் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பூட்டிய குடோனை சோதனை செய்தனர். அப்போது 1 டன் எடையுள்ள செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடி என கூறப்படுகிறது. செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.