கேரளாவில் தங்க கடத்தல் வழக்கை விசாரித்து வரும் அமலாக்க துறை ஸ்வப்னாவின் ஆடியோ குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
ஸ்வப்னாவுடன் தொடர்பில் இருந்ததாக கேரள மாநில மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி சிவசங்கரும் கைதானார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் தனது சுயசரிதையை புத்தகமாக வெளியிட்டார். அதில் ஸ்வப்னா பற்றி பல தகவல்களை கூறியிருந்தார். இதற்கிடையே ஸ்வப்னாவும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வெளியே வந்த அவர் இந்த வழக்கில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனை சிக்க வைக்க முயற்சி நடந்ததாக கூறியிருந்தார். இது தொடர்பான ஆடியோ வெளியானதை அடுத்து கேரள அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்க துறை ஸ்வப்னாவின் ஆடியோ குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.
