வாகன சோதனையில் சிக்கிய 11 கிலோ அம்பெட்டமைன் போதைப்பொருள் !!!
சென்னை – கும்மிடிபூண்டி தேசிய நெடுஞ்சாலையில் சோதனை நடத்தியபோது 11 கிலோ அம்பெட்டமைன் போதைப்பொருளை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மினிலாரி ஒன்றில் மிகப்பெரிய இயந்திரங்களை கொண்டு செல்வது போல் வாகனத்தின் ரகசிய அறையில் கண்டுபிடிக்க முடியாத வகையில் போதைப்பொருளை மறைத்து கடத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு சென்னையில் 5 பேர் உட்பட மொத்தமாக 6 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அதில் மூன்று பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.