கொரோனா தடுப்பூசி-ஆராய்ச்சி தகவல்

கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால் நோய் தீவிரம் ஆவதில்லை, இறப்பும் நேர்வதில்லை.

இதுபற்றி ஆராய்ச்சியாளரான சுவீடன் உமியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பீட்டர் நார்ட்ஸ்ரோம் கூறுகையில், “கொரோனா தடுப்பூசி நோய் தீவிரம் ஆவதில் இருந்தும், மரணம் நேரிடுவதில் இருந்தும் பாதுகாப்பை சிறப்பாக பராமரிக்கிறது. எனவே தடுப்பூசி போட்டுக்கொள்வது புத்திசாலித்தனமானது, முக்கியமானது” என தெரிவித்தார்.இந்த ஆராய்ச்சியில் பைசர் தடுப்பூசியின் 2-வது டோஸ் போட்டு 6 மாதங்களுக்கு பிறகு அதனால் கிடைத்த பாதுகாப்பு 29 சதவீதமாக குறைந்து விடுவதும், மாடர்னா தடுப்பூசியைப் பொறுத்தமட்டில் 2-வது டோஸ் போட்டு 6 மாதங்களுக்கு பிறகு பாதுகாப்பு 59 சதவீதமாகவும் குறைந்து விடுவது தெரிய வந்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.