கழுத்தில் டயருடன் அவதிப்பட்ட முதலை….

இந்தோனேஷியாவில் 6 ஆண்டுகளாக கழுத்தில் சிக்கிய டயருடன் அவதிப்பட்டு வந்த முதலைக்கு அதில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது.

பலூ நகரப்பகுதியில் வசிக்கும் அந்த முதலையின் கழுத்தில் 6 ஆண்டுகளுக்கு முன்பு, இரு சக்கர வாகனத்தின் டயர் சிக்கியது. முதலை வளரும் போது டயர் கழுத்தை இறுக்கி முதலை இறக்க கூடும் என மக்கள் அச்சப்பட்டனர். எனவே முதலை கழுத்தில் இருக்கும் டயரை எடுக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு தோல்வி அடைந்தது. இந்நிலையில் டிலி என்பவர், கோழி உள்ளிட்டவற்றை இரையாக காட்டி முதலையை கரைக்கு வரவழைத்து கயிறு கட்டி அதன் கழுத்தில் இருந்த டயரை அப்புறப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து முதலை மீண்டும் நீரில் விடப்பட்டது. இதனால் பலூ நகர மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.

Leave a Reply

Your email address will not be published.