பாம்பு கடித்து மூதாட்டி சாவு ….

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை அள்ளம் பகுதியை சேர்ந்தவர் பையன். இவரது மனைவி அழகம்மாள் (வயது80). இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் அருகில் உள்ள புளிய மரத்தில் இருந்து விழுந்த புளியங்காய்களை சேகரித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. இதனால், மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அழகம்மாள் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.

Leave a Reply

Your email address will not be published.