சைபர் குற்றவாளிகள் கையாளும் 36 வகை தந்திரங்கள்.!!!!

சைபர் குற்றவாளிகள் கையாளும் 36 வகை தந்திரங்கள். (அனைவரும் அவசியம் தவறாமல் படிக்க வேண்டிய பதிவு)

1) வங்கிகள் வாடிக்கையாளர்களை, ஒரு போதும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வங்கி விபரங்களை கேட்பதில்லை. மேற்படி அழைப்பை தவிர்ப்பது சிறந்தது. ஆகவே மேற்கண்ட விபரங்களை கேட்டு போன் செய்தால், எச்சரிக்கையாக இருக்கவும்.

2) வங்கியில் இருந்து பேசுவதாக சொல்லி 1) A/c நெம்பர் 2) ATM DEBIT CARD நெம்பர், 3) PIN நெம்பர் 4) CVV நெம்பர், 5) OTP நெம்பர் 6) நெட் பேங்கிங் PASS WORD 7) CREDIT CARD நெம்பர் கேட்டால் தெரிவிக்க வேண்டாம். தெரிவித்தால் உங்கள் வங்கி கணக்கு HACK செய்யப்படலாம்.

3) சுகாதாரதுறையில் இருந்து பேசுவதாகவும், தடுப்பு
ஊசி போடப்பட்டவர்களுக்கு அரசு உதவி வழங்க விபரங்களை UPDATE செய்ய வேண்டும் என கேட்பது போல் விபரங்களை கேட்டு, உங்களது உங்கள் வங்கி கணக்கை குறிவைத்து 1) Bank A/c No, 2) Aadhar Card No, 3) PAN Card No, etc பெற்றுக்கொண்டு உங்கள் செல்லுக்கு வந்த OTP விபரம் கேட்டு பணத்தை பறிக்க முயற்சி
செய்யக்கூடும். விபரம் தெரிவித்தால்
உங்கள்
வங்கி கணக்கு HACK செய்யப்படலாம்.

4) உங்கள் அக்கவுண்டில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டதாகவோ / லோன் தொகை பிடிக்கப்பட்டதாகவோ SMS அனுப்பி, செய்யவில்லை எனில், அந்த SMS வுடன் உள்ள LINK ஐ CLICK செய்ய வலியுறுத்துவார்கள். CLICK செய்யாமல் அதை தவிர்க்கவும். தேவைபட்டால் வங்கிக்கு நேரில் சென்று விளக்கம் பெறவும். CLICK செய்தால் உங்கள் a/c ல் இருந்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சிப்பார்கள்.

5) KYC/PAN/AADHAR NO விபரங்கள் குறித்து கேட்டாலோ, SMS/ LINK அனுப்பினாலோ UPDATE செய்யவேண்டாம். வங்கிக்கு நேரில் சென்று தேவைப்பட்டால் ஆவணங்களை கொடுக்கவும்.
BANK Account-ற்கான செல்போன் / ATM Card தொலைந்து போனாலோ / திருட்டு போனாலோ உடனடியாக வங்கிக்கு நேரில் தெரியபடுத்தி விரைந்து BLOCK செய்யவும்.

7) வளைதளத்தில் தேடப்படும் வங்கி கஸ்டமர் கேர் எண்கள் போலியாக இருக்க வாய்ப்பு உள்ளது. CUSTOMER CARE CALLS செய்பவர், உங்களுக்கு
உதவுவது போல் LINK அனுப்பியோ / SCREEN SHARE செய்ய விலியுறுத்தியோ OTP விபரங்கள் பெற்றும் உங்கள் A/C ஐ HACK செய்யபடலாம் . எச்சரிக்கையாக செயல்படவும்.

8) உங்களது தனிப்பட்ட புகைபடங்களை ஒருபோதும் யாரிடமும் பகிர வேண்டாம். அதை MORPHING செய்து பணம் பறிக்கவும் / வேறு வகையில் உங்களை மிரட்டவும் நேரிடலாம்.

9) Face bookல் உங்களுக்கு தெரிந்தவர் பெயரில் போலி கணக்கு துவங்கி உங்களிடம் பண உதவி கேட்க வாய்ப்புண்டு, எனவே பணம் அனுப்பும் முன் அவரிடம் நேரிலோ, தொலைபேசியிலோ உறுதி செய்யவும்.

10) SOCIAL MEDIA-களில் உங்கள் தனிப்பட்ட விபரங்களை யார் யாரெல்லாம் பார்க்கவேண்டும்/ பார்க்க கூடாது என்பதை PRIVACY SETTINGS ல் தெளிவாக குறிப்பிடவும்.

11) SOCIAL MEDIA-வில் உங்களது அன்றாட இருப்பிடம் மற்றும் நடவடிக்கைகள் பற்றிய LIVE UPDATE பதிவுகள் குற்றவாளிகளால் கவனிக்கப்படுகிறது என்பதை உணருங்கள்.

12) SOCIAL MEDIAவில் வரும் LINK- ஐ, CLICK செய்தால், Bank a/c HACK ஆக வாய்ப்புள்ளது.

13) பொது இடங்களில் வைக்கப்பட்ட USB சார்ஜர்களில் சார்ஜ் போடுவதை தவிர்க்கவும், உங்களது தகவல்கள் (JUICE JACKING) முறையில் திருட்டு போக வாய்ப்புள்ளது.

14) பொது இடங்களில் உள்ள WI- FI பயன்படுத்தும்போது உங்கள் மொபைல் HACK செய்யப்படலாம்.

15) குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக SOCIAL MEDIA தகவலின் அடிப்படையில் பொருள் வாங்கும் போது மிக கவனமாக செயல்படவும். (Fake website ஆக இருக்கலாம்)

16) செல்போன் Tower அமைக்க இடம் தேவை, மாதம் ரூ 30,000/- வாடகை, 30 லட்சம் முன்பணம் வழங்கப்படும் என வரும் செய்திகளை நம்பி பணம் செலுத்தி ஏமாறவேண்டாம்.

17) APP-களின் விபரங்களை முழுவதும் அறியாமல் Download செய்யவேண்டாம். உங்களது தகவல் / வங்கி கணக்கு திருட்டு போக வாய்ப்புள்ளது.

18) ஆர்வத்தை தூண்டும் தலைப்புகளில் வரும் செய்தி LINK- களுக்கு பின்னால் தகவல் / பணம் பறிக்கும் கும்பல் மறைந்திருக்கிறார்கள் என்பதை உணர்வீர்,

19) முதலீடு செய்யும் பணத்திற்கு தினசரி 1% கமிஷன் வழங்கப்படும் என வரும் விளம்பரத்தை நம்பி பணத்தை முதலீடு செய்யாதீர்கள். மாதத்திற்கு 30 % கமிஷன் யாராலும் தரமுடியாது என்பதை சற்று நிதானமாக யோசித்து பாருங்கள்.

20) PART TIME JOB/ WORK FROM HOME/ DAILY EARN Rs 200/- to 3,000/- என வரும் தொகைக்கு ஆரம்பத்தில் கமிஷம் முதலீடு செய்யாதீர்கள். பெரும் தொகை அவர்கள் கைக்கு சென்றால் திரும்ப கிடைக்காது.
விளம்பரங்களை பார்த்து செலுத்தும் சிறு தொகை
வழங்கப்படுவதை நம்பி பெரும் தொகையை இழந்து விடாதீர்கள்.

21) உங்கள் தொலைபேசி
எண்ணுக்கு விலைமதிப்புமிக்க பரிசு விழுந்துள்ளது என வரும் தகவலை நம்பி அதை பெற அவர்களால்
சொல்லப்படும் எந்த கட்டணத்தையும்
செலுத்தாதீர்கள்.22) DEPOSIT இருந்தால் லோன் வழங்கப்படும் என
வரும் விளம்பரத்தை நம்பாதீர்கள். லோனுக்காக
செலுத்தும் சேவை கட்டணங்கள் லோனுடன் திருப்பி செலுத்தப்படும் என நம்ப வைத்து பணம் பறிக்கப்படுகிறது. ஏமாறவேண்டாம்.

23) அறிமுகம் இல்லாதவர்களிடம் WhatsApp CALL-ல் பேச வேண்டாம். உங்கள் செல்போனில் உள்ள FRONT CAMERAவினால் எதிர் தரப்பில் உள்ளவர்களால், உங்களின் நடவடிக்கைகள் பதிவு
செய்யப்பட்டு, அந்த பதிவுகளை
உறவினர்களுக்கோ/ SOCIAL MEDIAவிலோ
போட்டுவிடுவோம் என உங்களை மிரட்டி பணம் பறிக்க வாய்ப்புள்ளது.

24) ONLINE-ல் வேலை தரப்படும் என ஆசையை துண்டும் விளம்பரங்கள் மூலம் உங்களை நம்ப வைத்து, உங்களிடம் சேவை கட்டணம் என்ற பெயரில் பணம் பறிக்க வாய்ப்புள்ளது. பணம் செலுத்தும் முன், அந்த நிறுவனத்தை பற்றியும், அவர்களால் வேலை பெற்றவர்கள் விபரங்களை கேட்டு பெற்று வேலை பெற்றவர்கள் இல்லத்துக்கே சென்று உறுதி செய்யுங்கள்.

25) PASSWORD விபரங்களை எவ்வளவு நம்பிக்கைக்கு
உரியவராக இருந்தாலும் ஒருபோதும்
கொடுக்கவேண்டாம். அடிக்கடி Password ஐ
Change பண்ணவும்.
பல வங்கி கணக்கு வைத்துள்ளவர் எனில் அனைத்துக்கும் ஒரே Password கொடுக்காதீர். தங்களது ஒரு வங்கி கணக்கு பாதிக்கப்படடால் மற்ற எல்லா கணக்கும் பாதிக்கப்படும்.

26) SOCIAL MEDIA வில் தனிப்பட்ட தகவல்கள் (முகவரி, தொலைபேசி எண். படித்த பள்ளி பெயர், நிரந்திர மற்றும் தற்காலிக இருப்பிடம்) போன்றவற்றை வெளிப்படையாக தெரியாமல் PROFILE LOCK செய்யவும்.

27) பெற்றோர் மேற்பார்வை இல்லாமல், அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஆன்லைனில் பழகிய யாருடனும் நேரில் சந்திக்க ஒப்புக்கொள்ள கூடாது.

28) அச்சுறுத்தலான E-mail, Message, Post போன்ற தகவல்களுக்கு பதில் அளிக்க வேண்டாம்.

29) பயமுறுத்தும் அல்லது புண்படுத்தும் வகையிலான
ONLINE / SOCIAL MEDIA உரையாடல்களை பெற்றோர் அல்லது நம்பகமான பெரியவர்களிடம் உடனே தெரிவிக்க வேண்டும். உதவிக்கு அருகில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும்.

30) SHARE MARKET
ல் நஷ்டம் இல்லாமல் செய்துதரப்படும் என தொலைபேசியில் / SMS ல்/
LINK
மூலம் அனுகினால் எச்சரிக்கையாக இருக்கவும். உங்கள் பணம் குறிவைக்கப்படுகிறது. ஜாக்கிரதை.

31) Scratch card offer To receive Rs 4900/- enter pin என அனுப்பி உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் பறிக்கபடும்.

32) கடைகளில்
ஒட்டப்பட்டுள்ள QR – CODEகளை
கடை
உரிமையாளர்களுக்கு தெரியாமல் குற்றவாளிகளால் மாற்றி வைக்கப்படுவதால், கடை உரிமையாளர்களும், பணம் செலுத்துபவர்களும் பாதிப்பு ஏற்படவாய்ப்புள்ளது. எனவே QR – CODEகளை பாதுகாப்பாக வைக்கவேண்டும்.

33) பொது இடங்களில் தனி DEBIT / CREDIT CARD பயன்படுத்தவும். அவைகளில் தேவைக்கு ஏற்ப பணம் இருப்பு வைத்தால் பெரும் சேதம் ஏற்பாடமல் பாதுகாக்கலாம்.
பரிவர்த்தனை நடைபெற்றதை

34) தவறான அறிந்தவுடன் உடனடியாக NATIONAL HELPLINE TOLL FREE NO /155260 எண்ணுக்கு தொடர்பு
கொண்டு தகவல் தெரிவித்தால் சைபர்
குற்றவாளிகள் கைகளுக்கு செல்லாமல், பணம் பரிவர்த்தனையை தடுத்து நிறுத்த இயலும்.

35) பெரும் சேமிப்பு உள்ள வங்கி கணக்கிற்கு CELL NO/ DEBIT/ CREDIT CARD/ NET இணைக்காமல் இருப்பது சிறந்தது. BANKING

36) தினசரி பண பரிமாற்றத்துக்கு தனி வங்கி கணக்கு
குறைந்த இருப்பில்
வைத்து
பத்திரமாக
கையாளவேண்டும். தவறு நடைபெற்றாலும்,
பெரும் நஷ்டம் ஏற்டாமல் தவிர்க்க உதவும்.

For lodging complaints:
Use
NATIONAL HELP LINE NO 155260 www.cybercrime.gov.in

தமிழ் மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.

Leave a Reply

Your email address will not be published.