அழகாக இடுப்பு, வயிறு பெற…….

வயிறு அழகாக வயிற்றில் அழுக்கு சேராமலும், கேஸ்ட்ரிக் ட்ரபிள் ஏற்படாமலும் பார்த்துக் கொண்டாலே வயிற்றுக்கு 50% அழகு கிடைத்து விடும். இதற்கு சீரகத் தண்ணீர்தான் சிறந்த ட்ரீட்மெண்ட்!

ப்யூட்டி ரெசிபிகள்

1.சீரகத் தண்ணீர் தேவையான பொருட்கள் :சீரகம் -4 டீஸ்பூன்,தண்ணீர் – 3 லிட்டர்செய்முறை :சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்தெடுக்கவும். இதை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, இந்தத் தண்ணீரை ஆற வைத்து குடித்து வாருங்கள். அஜீரணம் வராது. ஜீரண உறுப்புகள் நன்றாக வேலை செய்யும். மலச் சிக்கலும் ஏற்படாது. அப்புறமென்ன… கை மேல், ஸாரி…

வயிறு மேல் பலன் (அழகு) தான் போங்க..

தேவையான பொருட்கள் :பெரிய வெங்காயம்-2தயிர் – 100 மி.கி.உப்பு – சிறிதளவுசெய்முறை :வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொண்டு, அதில் தயிரையும், உப்பையும் கலந்து சாப்பிட்டு வாருங்கள். (காய்கறி சாலட்) வயிற்றில் சுருக்கமா… மூச்… வரவே வராதுங்க!

பாவாடையை இறுகக் கட்டி கட்டி இடுப்பைச் சுற்றி கறுத்துப் போய் விட்டதா?

கடுகு எண்ணெயை லேசாக சூடு செய்து, அதை இடுப்பைச் சுற்றி ஒரு மணி நேரம் ஊற விட்டு கடலை மாவால் தொடர்ந்து தேய்த்துக் கழுவி வாருங்கள். அழகான, கருப்பில்லாத ஆலிலை போன்ற வயிறு உங்களுக்கே உங்களுக்குதான்! டெலிவரிக்குப் பிறகு வரும் வயிறு சுருக்கத்துக்கு கடுகு எண்ணெயுடன் கோதுமை தவிடை கலந்து வயிற்றில் பூசி ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். இப்படியே தொடர்ந்து செய்து வர, வயிறு சுருக்கம் வரவே வராது!கற்றாழையில் உள்ள உட்பொருட்கள் மார்பகங்களை இறுக்கமாக வைக்கும். மேலும் கற்றாழையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ப்ரீ ராடிக்கல்களால் மார்பக செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும். அதற்கு கற்றாழை ஜெல்லை மார்பகங்களில் தடவி 10 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், மார்பகங்கள் நன்கு அழகான வடிவில் இருக்கும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சாந்தினி.

Leave a Reply

Your email address will not be published.