பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு
ஜனவரி 2 வது வாரத்தில் கொரோனா தினசரி தொற்று அதிகரித்தால் பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா தாக்கம் சற்று குறைந்து வருவதால், பிப்ரவரி 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றுவதன் அடிப்படையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்..
செய்தியாளர் சையது தமிழ் மலர் மின்னிதழ்