சீனா பாலம் கட்டுகிறது!!!!!
புதுடில்லி : ‘எல்லை பகுதியில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில், சீனா பாலம் கட்டி வருகிறது’ என பார்லிமென்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. லடாக் எல்லைப் பகுதியில், இரு நாட்டு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளதால், தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதற்கு மத்தியில், லடாக்கின் பாங்காங் சோ ஏரியின் குறுக்கே, சீன ராணுவத்தினர் பாலம் கட்டி வருவதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.