பெண்ணாடம் அருகே ரூ. 3.93 லட்சம் பறிமுதல்!!!

பெண்ணாடம் அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ. 3 லட்சத்து 93 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.கடலுார் மாவட்டம், திட்டக்குடி மண்டல துணை தாசில்தார் ஜெயச்சந்திரன், மங்கலம்பேட்டை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் ஆகியோர் நேற்று பகல் 11.30 மணியளவில், பெண்ணாடம் அடுத்த இறையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.விருத்தாசலத்தில் இருந்து தொழுதுார் சென்ற பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் பைக்கில் சென்ற இருவர் ஆவணமின்றி ரூ. 3 லட்சத்து 93 ஆயிரத்து 500 எடுத்துச் சென்றது தெரிந்தது.விசாரணையில், இருவரும் தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், 32; சிவா, 29; விருத்தாசலம், பெரியார் நகரில் வாடகை வீட்டில் வசித்தனர். விருத்தாசலம் கிருஷ்ணா பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து தொழுதுார் கிருஷ்ணா ஸ்டீல் கடையில் உள்ள இசக்கிமுத்து என்பவருக்கு கொடுக்க பணத்தை எடுத்துச் செல்வதாக தெரிவித்தனர். அவர்களிடம் இருந்த ரூ. 3 லட்சத்து 93 ஆயிரத்து 500 பறிமுதல் செய்து, பெண்ணாடம் தேர்தல் நடத்தும் அலுவலர் பாஸ்கரனிடம் ஒப்படைத்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.

Leave a Reply

Your email address will not be published.