போதை பொருள் பறிமுதல்!!!!
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் கொத்திமங்கலம் கூட்ரோடு பகுதியில் திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் அவர்கள் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு கார் காவல் அதிகாரிகள் நிறுத்த கூறியும் நிறுத்தாமல் அதிவேகமாக சென்ற காரை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர் மடக்கிப் பிடித்த காரை போலீசார் தீவிர சோதனையிட்டதில் அந்த காரில் 150 கிலோ புகையிலை போதை பொருள் கடத்தி வரப்பட்டு உள்ளது இதன் மதிப்பு சுமார் 60 ஆயிரம் ஆகும் இது சம்பந்தமாக திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த ராஜா 37 வயது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார் அவர் பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி வேல்முருகன் திருக்கழுக்குன்றம்.