உக்ரைன் பதற்றத்தை தணிக்க பேச்சு நடத்த தயார்:ரஷ்யா…
உக்ரைன் பதற்றத்தை தணிக்க மேற்கத்திய நாடுகளுடன் மேலும் பேச்சு நடத்த தயாராக உள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனை ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் அணியில் சேர்க்க ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதனால் உக்ரைன் மீது போர் தொடுக்கும் நோக்கில் அந்நாட்டின் எல்லையில் ஒரு லட்சம் ராணுவ வீரர்களை ரஷ்யா நிறுத்தியுள்ளது.
இதனால் எழுந்துள்ள போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா ரஷ்யாவிற்கு கடிதம் அனுப்பியது. அதற்கு பதில் கடிதத்தை ரஷ்யாவும் அனுப்பியது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடின் பேசியதாவது:உக்ரைன் பதற்றத்தை தணிக்க ரஷ்யா விரும்புகிறது. எனவே அனைத்து நாடுகளின் பாதுகாப்பு கருதி மேற்கத்திய நாடுகளுடன் உக்ரைன் பிரச்னை தொடர்பாக மேலும் பேச்சு நடத்த தயாராக உள்ளோம். உக்ரைனை தாக்கும் திட்டம் ரஷ்யாவுக்கு கிடையாது.இவ்வாறு அவர் பேசினார்.இதனால் விரைவில் உக்ரைன் பிரச்னைக்கு முடிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் முபாரக் திருச்சி.