தகுதி இல்லாதவர்கள் மீது நடவடிக்கை..
பத்திரிகைத் துறைக்கு தகுதி இல்லாதவர்கள் மீது உயர்மட்ட அளவில் நடவடிக்கை எடுக்கப்படும்…
தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனின்
கடந்த ஆறு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன்.. இதில் சமீபகாலமாக பத்திரிகைத் துறைக்கு அடிப்படை தகுதி இல்லாதவர்கள் ஒரு சிலரை நீக்கி வருகிறோம்… எங்கள் நிறுவனர் காளிதாஸ் அய்யாவின் கனவு நிறைவேற இந்த பத்திரிக்கை சங்கத்தை நடத்த விடாமல் இடையூறு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம்
மேலும் அவர்களுடைய வரலாற்றுப் பின்னணி என்னவென்று ஊடகம் மற்றும் பத்திரிகை துறைக்கு முகத்திரை கிழித்து தெரிவிக்கப்படும்… ஏற்கனவே அவர்களுடைய தகவல்கள் அனைத்தும் சேகரித்து வைத்து உள்ளோம்… அதுமட்டுமல்ல எங்களுடைய தமிழ்நாடு ஜர்னலிஸ்ட் யூனியன் சம்பந்தமாக யாரேனும் உரிமை கொண்டாடவோ… களங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டாலோ உயர்மட்ட அளவில் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம்……
சிறப்பாக பணியாற்றி வரும் எனக்கு இடையூறு கொடுக்கும் அனைத்து நபர்கள் மீதும் முதல்வர், காவல் ஆணையர், காவல்துறை தலைவர், கவர்னர், பிரதமர், உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் என வழக்கு தொடர்ந்து தக்க பதிலடி கொடுக்கப்படும்…
இது சம்பந்தமாக ஒரு சிலர் பெயரை குறிப்பிட்டு நாங்கள் புகார் அனுப்பி உள்ளோம்…
இனி அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தகுந்த நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுக்கிறேன் என மூத்த பத்திரிக்கையாளர் சிரஞ்சீவி அனீஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி, ராகுல் சென்னை.