உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்!
குளிர்காலம் மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரமற்ற நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவது இயல்பு அத்தகைய மூச்சுத் திணறலின் காரணமாக நுரையீரலில் ஏற்படும் நோய்த்தொற்றைக் குறைக்க லிங்க முத்திரை உதவுவதாக மருத்துவ ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. நுரையீரல் தொற்று என்பது நுரையீரலைச் சுற்றி நீர் சேர்கிறது என்பதைக் குறிக்கும். அப்படி நீர் சேரும்போது, நுரையீரல் விரிந்து, சுருங்குவதில் தடை ஏற்படும். அதனால் அணுக்களுக்குப் போக வேண்டிய ஆக்ஸிஜன் அளவில் தடை ஏற்படும். அதனால்தான் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதையே உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும் நிலை என்கிறோம். லிங்க முத்திரை செய்யும்போது, உடலில் வெப்ப நிலை அதிகமாகும். அவ்வாறு ஏற்படும் வெப்பநிலை நுரையீரலில் தேங்கி நிற்கும் தேவையற்ற நீரை கரைத்துவிடும். இதனால் நுரையீரல் சீராக இயங்கத் தொடங்கும். உடலில் சீராக ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, உடலில் கழிவுகள் சேர்வது, ரத்த நாளங்கள் சீராகச் செயல்படாமல் போவது என்று மூன்று முக்கிய காரணங்கள் நோய்ப் பரவலுக்கு காரணமாக இருக்கின்றன. இவை அனைத்தையும் சீராக வைத்துக்கொள்ள லிங்க முத்திரை உதவும். மேலும் பயம், பதற்றம், மாதவிடாய்க் கோளாறுகள் போன்ற பிரச்னைகளையும் சீர் செய்யும். சளி, மூச்சிரைப்பு, சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் இதை முதலுதவி போன்று அன்றாடம் செய்யலாம். அல்சர், அஜீரணக் கோளாறுகள், பித்தம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் லிங்க முத்திரை செய்வதைத் தவிர்க்கலாம்…
லிங்க முத்திரை செய்யும் வழிமுறைகள்….
இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றோடு ஒன்றாக இறுக்கமாகக் கோர்த்து, இடது பெருவிரலை மட்டும் நேராக நிமிர்த்தி வைத்துக் கொள்ளவேண்டும். அத்துடன் இரண்டு உள்ளங்கைகளும் அழுத்தமாக இணைந்திருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். இதுவே லிங்க முத்திரையாகும். இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்.
லிங்கம், வெப்பத்தின் வடிவமாகக் கருதப்படுகிறது. இது, வெப்பம் மற்றும் உயிர்சக்தியைத் தன்னிடத்தில் உள்ளடக்கி, நோய்கிருமிகள், உடலில் தேங்கி உள்ள கழிவுகளை அகற்றவல்லது. பல மணி நேரம் நடைப்பயிற்சி செய்யும்போது ஏற்படும் வியர்த்தல் உள்ளிட்ட பலனை சில நிமிடங்களில் இந்த முத்திரை தந்துவிடும்.
இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உடல் எடை அதிகமாக இருப்பின் குறைந்து சரியான அளவில் இருக்கும். பெண்கள்: வலது கை மேற்புறமாக இருக்குமாறு கோத்து, இடது கை கட்டைவிரலை உயர்த்த வேண்டும்.
ஆண்கள்: இடது கை மேல்புறமாக இருக்குமாறு கோத்து, வலது கட்டை விரலை உயர்த்த வேண்டும். வயிறு சம்பந்தமான நோய் உள்ளவர்கள் இந்த முத்திரையை செய்யகூடாது என்றும் கூறப்படுகிறது. ஒரேயடியாக நீண்ட நேரத்திற்குச் செய்ய ஆரம்பிக்காமல் சுமார் ஐந்து நிமிட காலம் செய்வதில் இருந்து ஆரம்பிப்பது நல்லது. பின் சிறிது சிறிதாக நேரத்தைக் கூட்டிக் கொண்டு செல்லுங்கள். இந்த முத்திரையால வியக்கத்தக்க பெரும்பலன்கள் கிடைக்கின்றன. எனவே உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையிலேயே…
முத்திரை தொகுப்பு:- சங்கரமூர்த்தி…. 7373141119