ஆன்லைன் தேர்வு: கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய செய்தி!
ஆன்லைன் தேர்வு முடிந்த பின் மாணவர்கள் விடைத்தாள்களை வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு அனுப்ப வேண்டும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், “நேரடியாக எழுதப்பட்ட விடைத்தாள்களையும் கல்லூரிகளுக்கு அஞ்சல் மற்றும் கூரியர் வாயிலாக அனுப்ப வேண்டும். மாணவர்கள் வாட்ஸ் அப், மின்னஞ்சல் வாயிலாக அனுப்பும் விடைத்தாள்கள் மற்றும் அஞ்சல் வாயிலாக அனுப்பும் விடைத்தாள்களும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.