தொழில் வல்லுனர்களால் பயிற்சி..
AXIS வங்கியின் இளம் வங்கியர் திட்டத்தின் பிப்ரவரி – 2022 பேட்ச் சேர்க்கை தொடங்குகிறது
பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு வங்கித் துறையில் வேலைக்கு சேர்ந்த முதல் நாள், முதல் மணியில் இருந்தே திறம்பட செயலாற்றும் செயல் திறன் பயிற்சி,
04-01-2022 இந்தியா: மணிபால் அகாடமி ஆப் BFSI ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து ” ஆக்சிஸ் பேங்கின் யங் பேங்கர்ஸ் (இளம் வங்கியர்) ப்ரோக்ராம்” ற்கான பிப்ரவரி 2022 பேட்ச்சுக்கான சேர்க்கை தொடங்குகிறது. 2012 ல் தொடங்கிய இந்த திட்டம் இந்தியாவில் இளம் வங்கியராக வங்கிப் பணியில் சேர விரும்பும் இளைஞர்களைத் தயார் படுத்தும் நோக்கத்துடன் தொடங்கியது. இத்திட்டத்தின் மூலம் ஆக்சிஸ் வங்கியில் வேலைக்கு அமர்த்தப்பட்ட 9000 க்கும் மேலானவர்களின் வெற்றி கதைகளுடன் BFSI மணிப்பால் அகாடமியின் அனுபவமிக்க ஆசிரியர்களால் இத்திட்டம் நடைபெற்று வருகிறது
BFSI – மணிப்பால் அகாடமியின் வாடிக்கையாளர்களுக்காக வங்கித் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் மிகுந்த ஆசிரியர்களால், இளம் வங்கியர்களை, வங்கிக் கிளைகளில் சேர்ந்த முதல்நாள், முதல் மணி நேரத்திலிருந்தே செயல் திறன் மிக்கவர்களாக செயல்பட, தயார் படுத்தும் வகையில், இந்த ” JOB READY” பயிற்சி திட்டம் உருவாக்கப்பட்டது.
பங்கேற்பாளர்கள் தங்கள் BFSI தொழில் பயணத்தில் வெற்றி பெற தங்களை தயார் படுத்திக்கொள்ள இத்திட்டம் மூன்று முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் ஆறு மாதங்களில் பயிற்சி பெறுபவர்களுக்கு பயிற்சி வளாகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. நிபுணர்களின் விரிவுரைகள் e – learning தொகுப்புகள், மாதிரி கிளை செயல்முறைகள் கேஸ் ஆய்வுகள், களப்பார்வை, FINACLE பயிற்சி, மற்றும் தொழில் வல்லுனர்களால் நடத்தப்படும் அமர்வுகள் மூலம் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
செய்தியாளர் குமார்